இந்தியாவில் சியோமி ரெட் நோட் 5 ப்ரோ மொபைல்களுக்கு எம்ஐயூஐ 10 அப்டேட் புதிதாக வந்துள்ளது.
இந்தியாவில் சியோமி நிறுவனம் விற்பனையில் No 1 இடத்தில் உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்த நிறுவனம் குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் செல்போன்களை ஏராளமானனோர் வாங்கி வருகின்றனர். தற்போது வரை ஏராளமான மாடல்களும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சியோமி நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துள்ளது. மேலும், அதிகம் விரும்பும் அம்சங்களில் ஒன்று சியோமி மொபைல்களில் உள்ள எம்ஐ யூசர் இன்டர்பேஸ்தான்.
எம்ஐயூஐ என்று அழைக்கப்படும் இதன் புதிய அப்டேட் தற்போது, அறிமுகமாகியுள்ளது. இகுறித்து எம்ஐயூஐ குழுவில் உள்ள பயனாளர்கள் கூறும் போது, புதிய அப்டேட் MIUI 10.0.1.0.OEIMIFH என்ற பெயரில் உள்ளது எனவும் அளவு 580 ஆக இருக்கின்றது எனவும் கூறியுள்ளனர்.
மாற்றி அமைக்கப்பட்ட நோட்டிபிகேஷன் பேனல், மேல்டி டாஸ்கிங் மேனேஜரில் மாற்றம், வெவ்வேறு ஆஸ்பெக்ட் ரேஷியோவுக்குப் பொருத்தும் அம்சம் ஆகியவை எம்ஐயூஐ10 அப்டேட்டில் குறிப்பிடத்தக்க புதிய அம்சங்களாக உள்ளன.
இதனை சியோமி ரெட் நோட் 5 ப்ரோ மொபைலில் முதலில் பெற முடியும். சில நாட்களில் மற்ற மாடல்களுக்கும் கிடைக்கும். தற்போது புதிய அப்டேட் வந்துள்ளதால் சியோமி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.




